மெர்லிஸ் ஓட்டலில் நகை கண்காட்சி
கோவை : சென்னை யுனைடெட் எக்சிபிஷன்ஸ் நிறுவனம் சார்பில், அவிநாசி ரோடு, கருபரம்பாளையம் பிரிவில் உள்ள, மெர்லிஸ் ஓட்டலில் மாபெரும் நகை கண்காட்சி நடக்கிறது. கண்காட்சியை சிறப்பு விருந்தினர்கள் கிருத்திகா, தீபிகா, சித்ரா, ரிங்கி ஷா, துலிகா, ஷைனி, ஸ்ரீமதி,ரோகினி, ஸ்ரீதேவி, அனிபிரியா, பவித்ரா, வைஷ்ணவி, நிவேதா, பத்மா, சித்ரா, கவிதா, ராதிகா நிசானி ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஜூவல்லரி நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் முத்து நகைகள், குந்தன், மீனாகரி, போல்கி, ஜடவ், ரூபி, எமரால்டு நகைகள், பரிசு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு பிரத்யேக நகைகள், கைவினை நகைகள் என எண்ணற்ற டிசைன்களில், ஒரே இடத்தில் வாங்கலாம். 60 அரங்குகளில், ஒரு லட்சத்திற்கும் மேலான நகைகள் இடம்பெற்றுள்ளன. இன்றுடன் நிறைவுபெறும் கண்காட்சியை, காலை, 10:00 முதல் இரவு 8:00 மணி வரை பார்வையிடலாம்.