மேலும் செய்திகள்
பட்டப்பகலில் வீட்டில் 9 பவுன் நகை திருட்டு
09-Jun-2025
கோவை; பீளமேடு பகுதியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து, பட்டப்பகலில் நகை திருடியவர்களை போலீசார் தேடுகின்றனர்.பீளமேடு, பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரன், 26; தனியார் நிறுவன ஊழியர். கடந்த 1ம் தேதி காலை, ராஜேஸ்வரன் மற்றும் அவரது மனைவி, வழக்கம்போல பணிக்கு புறப்பட்டு சென்றனர்.இரவு 7.30 மணியளவில், ராஜேஸ்வரனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் ராஜேஸ்வரனை போனில் அழைத்து வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, பத்தரை சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி கொலுசு திருட்டு போயிருந்தது தெரியவந்தது.கைரேகை, சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றிய, பீளமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
09-Jun-2025