சுகாதாரத்துறையில் வேலை விண்ணப்பங்கள் வரவேற்பு
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சித்த மருத்துவ அலுவலகம், மாநகராட்சி, மருத்துவ கல்லுாரி மருத்துவமனை , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. அதன்படி, பல் மருத்துவர், யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவர், தெரபி உதவியாளர், பல் மருத்துவ பிரிவு டெக்னீசியன், உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில், பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். விண்ணப்ப படிவம் மற்றும் பிற விபரங்களை, https://coimbatore.nic.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தகுதியான நபர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவத்துடன், பிற அனைத்து சான்றிதழ்கள் இணைத்து, 2026 ஜன., 19 தேதி மாலை, 5:00 மணிக்குள் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சுகாதார அலுவலகத்தில் நேரிலோ, தபால் வழியாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.