உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நீதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லை! மூத்த வக்கீல் அருண்சுவாமிநாதன் பேட்டி

 நீதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லை! மூத்த வக்கீல் அருண்சுவாமிநாதன் பேட்டி

கோவை: நீதிபதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லை என்று ஐகோர்ட் மூத்த வக்கீல் அருண்சுவாமிநாதன் கூறினார். திருப்பரங்குன்றம் தீபத்துாணில், தீபம் ஏற்ற உத்தரவிட்டு, மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தார். அவர் அளித்த தீர்ப்புக்கு எதிராகவும், நீதிபதியை பதவி நீக்கம் செய்ய கோரியும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள், மக்களவை சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரியும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதனுக்கு ஆதரவாகவும், கோவை, திருப்பூர். கரூர்மாவட்ட பா.ஜ., வக்கீல்கள், 1,500 க்கும் மேற்பட்ட வக்கீல்களிடம் கையெழுத்து பெற்றனர். இந்த மனுவை மக்களவை சபாநாயகரிடம் வழங்க உள்ளனர். தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகி வாதாடிய ஐகோர்ட் மூத்த வக்கீல் அருண்சுவாமிநாதன் கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறி யதாவது: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி சுவாமி நாதன், ஜாதி ரீதியாக செயல்படுவதாகவும், அவரை பதவிநீக்கம் செய்ய கோரியும் தி.மு.க., எம்.பி., க்கள் மக்களவை சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர். தமிழகத்தில் நீதிபதிகள் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. நீதிபதிகளின் சுதந்திரம் கேள்விகுறியாக உள்ளது. நீதிமன்றங்கள் மீதும், நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்பின் மீதுள்ள நம்பிக்கையை கெடுக்கும் வகையில், தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் சுய நல அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர். நீதிபதி மீது களங்கம் விளைவிக்கும் வகையில், அவரை பதவிநீக்கம் செய்யக்கோரி, எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கொடுத்துள்ள மனுவை, மக்களவை சபாநாயகர் ஆரம்ப நிலையில் தள்ளுபடி செய்து, நீதிமன்ற மாண்பை காக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கானவக்கீல்களிடம்கையெழுத்து பெற்று வருகிறோம். இவ்வாறு அருண்சுவாமிநாதன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ