உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிரப்பள்ளி ரோட்டில் கபாலி யானை உலா

அதிரப்பள்ளி ரோட்டில் கபாலி யானை உலா

வால்பாறை: வால்பாறை - அதிரபள்ளி ரோட்டில் 'கபாலி' யானை நடமாடுவதால், வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும் என, கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில், அதிரப்பள்ளி அருவி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிகளவில் சென்று வருகின்றனர். வால்பாறையிலிருந்து மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில், 'கபாலி' என்றழைக்கப்படும் யானை கடந்த சில நாட்களாக அடிக்கடி ரோட்டின் குறுக்கே நின்று வாகனங்களை வழிமறித்தும், தாக்கியும் வருகிறது. குறிப்பாக, அதிரப்பள்ளி அருவிக்கும், மளுக்கப்பாறைக்கும் இடையே 'கபாலி' யானை ரோட்டில் முகாமிடுகிறது. இதனால், இந்த ரோட்டில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ், சுற்றுலா வாகனங்கள் அச்சத்துடன் இயக்கப்படுகின்றன. கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறையிலிருந்து சாலக்குடி செல்லும் ரோட்டில், அதிரப்பள்ளி அருவி யானை அடிக்கடி ரோட்டில் முகாமிட்டு, வாகனங்களை வழிமறிக்கிறது. எனவே, இந்த ரோட்டில் செல்லும் சுற்றுலா பயணியர் கவனத்துடன் தங்களது வாகனங்களை இயக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த கவனமாக செல்ல வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ