உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலகாலேஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு

காலகாலேஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் பொறுப்பேற்பு

கோவில்பாளையம் ; காலகாலேஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அறங்காவலர்கள் பொறுப்பேற்றனர். கோவில்பாளையத்தில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த, பிரசித்தி பெற்ற, கொங்கு நாட்டு திருக்கடையூர் என்று அழைக்கப்படும் காலகாலேஸ்வரர் கோவில் உள்ளது. இது பாடல் பெற்ற தலம். இக்கோவிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அறங்காவலர்களை நியமித்து, இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து கோவில் வளாகத்தில், நேற்று, அறங்காவலர் குழு தலைவராக, சிரவை நாகராஜ் பொறுப்பு ஏற்றார். அறங்காவலர்களாக ரவிச்சந்திரன், ரவீந்திரன், சிவசாமி, சுமதி ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திரா, ஆய்வாளர் தமயந்தி, செயல் அலுவலர் அருண்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ