உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் 14ம் தேதி கனகாபிேஷகம்

வரும் 14ம் தேதி கனகாபிேஷகம்

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் கோவிலில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கனகாபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது.பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர் கோவிலில், தமிழ் புத்தாண்டு கனகாபிேஷகம் வரும், 14ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு, அதிகாலை, 4:30 மணி முதல் ஏழு வகையான ேஹாமங்கள், 11 வகையான திருமஞ்சன அபிேஷகம் நடக்கிறது.காலை, 6:00 மணிக்கு கனகாபிேஷகம் (பொற்காசுகளால்) நடக்கிறது. அதன்பின், சாற்றுமுறை நடைபெற்று தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு கனகாபிேஷக காசுகள் வழங்கப்படும். சித்திரைக்கனி வழிபாட்டுக்கு, கனி வகைகள் வழங்க விரும்புவோர், கோவிலில் வழங்கலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை