உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கன்னிமார் கோவில் பாலாலய பூஜை

கன்னிமார் கோவில் பாலாலய பூஜை

அன்னுார்; அன்னுார் அருகே பழமையான கன்னிமார் கோவிலில், பாலாலய பூஜை நடந்தது. நல்லிசெட்டிபாளையத்தில் மிகப்பழமையான கன்னிமார் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், கன்னிமார் மற்றும் விநாயகருக்கு, புதிதாக பல லட்சம் ரூபாய் செலவில் சன்னதி, விமானம் அமைத்து திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, பாலாலய ஹோம பூஜை நடந்தது. இதில் நல்லி செட்டிபாளையம், குருக்களையம்பாளையம், அச்சம் பாளைம் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கருங்கற்களால் சிற்ப வேலைப்பாடுகளுடன் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை