மேலும் செய்திகள்
கந்தசஷ்டி விழா; சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்
09-Nov-2024
அன்னுார்; அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில், கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கும்பாபிஷேக ஆண்டு விழா நேற்று நடந்தது. விழாவில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காரமடை வேதவியாச சுதர்சன பட்டர் தலைமையில் ஹோமம், சுவாமி திருக்கல்யாணம், மாங்கல்ய தாரணம் நடந்தது.ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக, கரி வரதராஜ பெருமாள் அருள்பாலித்தார்.அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மணி, சங்கரன், தாசபளஞ்சிக மாதர் சங்கத்தினர், குலதெய்வ வழிபாட்டுக் குழுவினர் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.
09-Nov-2024