உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புகையிலை பொருள் சப்ளை; கேரள வாலிபர்கள் கைது

புகையிலை பொருள் சப்ளை; கேரள வாலிபர்கள் கைது

கோவில்பாளையம்; கோவில்பாளையத்தில், மேற்கு பகுதியில் பெட்டி கடைகளுக்கு சிலர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சப்ளை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து கோவில்பாளையம் போலீசார் நேற்றுமுன்தினம் அத்திப்பாளையத்தில் சோதனை நடத்தினர். இதில் இருவர், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 20 கிலோ புகையிலைப்பொருளுடன் பிடிபட்டனர். போலீசார் அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம், மலப்புரத்தைச் சேர்ந்த ஜாபர், 32. இப்ராஹிம் 30, என தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி