உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.எம்.சி.எச்., மருத்துவமனை 9 விருதுகள் வென்று சாதனை

கே.எம்.சி.எச்., மருத்துவமனை 9 விருதுகள் வென்று சாதனை

கோவை: டெல்லியில் நடந்த ஹெல்த்கேர் உச்சிமாநாடு மற்றும் விருதுகள் விழாவில், கோவை கே.எம்.சி.எச்., மருத்துவமனை ஒன்பது விருதுகளை வென்றுள்ளது.பல்துறை மருத்துவ சேவை, புற்றுநோய் மருத்துவம், இருதய நோய், சிறுநீரகம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் சிறப்பான செயல்திறனுக்கான ஐந்து தேசிய விருதுகள் வென்றுள்ளது. அவசரகால தீவிர சிகிச்சை மற்றும் நரம்பியல் சிகிச்சை பிரிவில் தென்னிந்திய அளவில் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. தாய் - சேய் பராமரிப்பு மற்றும் இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சை செயல்திறனுக்காகவும் இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.கே.எம்.சி.எச்., தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, செயல் இயக்குனர் டாக்டர் அருண் ஆகியோர் பேசுகையில், 'இந்த ஒன்பது விருதுகள் கே.எம்.சி.எச்., குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினராலும் வழங்கப்படும் அயராத அர்ப்பணிப்பு, நிபுணத்துவம் மற்றும் கனிவான சேவைக்கான சான்று' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி