உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை 25ம் ஆண்டு சிறப்பு

கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை 25ம் ஆண்டு சிறப்பு

கோவை: காந்திபுரம், 100 அடி ரோட்டில் அமைந்துள்ள மாநில கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் தலைமை அலுவலகத்தின், 25ம் ஆண்டு திறப்பு விழா கொண்டாடப்பட்டது.கணபதி ஹோமத்தை தொடர்ந்து, 'கொங்கு மணமாலை' என்ற திருமண தகவல் வெப்சட்டை, புதுப்பொலிவுடன் எளிதாக உபயோகிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்ட செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.இதுவரை 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட திருமணங்கள், இந்தப்பேரவை மூலமாக நடத்தப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், கோப்பை, மெடல் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.பேரவை மூலம் இன்னும் பல சேவைகளை தொடர, உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், இதற்கு 18 வயது நிறைந்த ஆண், பெண்கள் பேரவையில் உறுப்பினராக இணைய வேண்டும் எனவும், நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். விபரங்களுக்கு, 99655 77155, 97907 33466 ஆகிய எண்களில் அழைக்கலாம் என்று தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை