உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய வட்டார வளமையத்தில், எஸ்.எஸ்.ஏ., சார்பில் பள்ளி செல்லா குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.பயிற்சி முகாமை வட்டார வள மைய மேற்பார்வையாளர் வெள்ளிங்கிரி துவக்கி வைத்தார். இதில், செயல்வழி கற்றலில், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல், சமூகவியல் ஆகிய பாடங்களுக்கு பாட வாரியாக சின்னங்கள், பாட அட்டையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள், மாணவர்களுக்கு எளிமையாக பாடம் கற்று கொடுக்கும் முறை, படைப்பாற்றல் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் கல்வி அறிவயல், சமூகவியல் ஆகிய பாடங்களில், அறிமுகம், மனவரைப்படம் தொகுத்தல், ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சி முகாமில், ஆசிரிய பயிற்றுனர்கள் மகேஸ்வரி, சிவசெல்வி, காஜா மைதீன், காயத்ரி, அமுதவல்லி, சத்யமூர்த்தி ஆகியோர் பயிற்சி அளித்தனர். பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த உண்டு, உறைவிட பள்ளி, இணைப்பு மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் 54 பேர் பங்கேற்றனர்.தெற்கு ஒன்றிய இணைப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ஞானகுரு ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். நேற்று துவங்கிய பயிற்சி முகாம் நாளை (28ம் தேதி) வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 25, 2025 11:06

சல்லி காசுக்கு பிரியோஜனமில்லை.. உள்ளே இருக்குற தேச துரோகிகளை களை எடுக்காமல் எத்தகைய நவீன ஆயுதங்களாலும் ஒன்றும் செய்ய முடியாது.....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை