தேசிய அளவில் சிறந்து விளங்கும் கிருஷ்ணா கல்விக்குழுமம்
கோவை : கோவையில் முன்னணி கல்விநிறுவனங்களில் ஒன்றாக திகழும் கிருஷ்ணா கல்விக்குழுமத்தின் கீழ், 5 கல்லுாரிகள் செயல்பட்டு வருகிறது.இக்கல்விநிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் மலர்விழி வழிகாட்டுதலின் பேரில், அறங்காவலர் ஆதித்யா, தலைமை செயல் அதிகாரி சுந்தரராமன் இந்த கல்வி குழுமம் சிறந்த முறையில் செயல்பட உறுதுணையாக உள்ளனர்.ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி தன்னாட்சி கல்வி நிறுவனம். தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் A++ சான்றிதழ் பெற்றுள்ளது. 11 இளநிலை,4 முதுநிலை,ஒரு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி படிப்பையும் வழங்கிவருகிறது. என்.ஐ.ஆர். எப்., தரவரிசை பட்டியலில் NIRF தரவரிசைப் பட்டியலில் 83வது இடத்தை தக்கவைத்துள்ளது.ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, கோவைப்புதூர்ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி, நாக்., ஆய்வுகளில் 'ஏ' மதிப்பீடும், ஏழு இளங்கலை படிப்புகளுக்கு என்.பி.ஏ., அங்கீகாரம் பெற்றுள்ளது. தேசிய தரவரிசைப்பட்டியலில், 2024ல் பொறியியல் பிரிவில் 151 முதல் 200 வரையிலான இடத்தினைப் பெற்றுள்ளது.ஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரிஸ்ரீ கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லுாரி அரசு உதவி பெறும் கல்லுாரியாக செயல்படுகிறது.கட்டிடப் பொறியியல், கருவி மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல், இயந்திரப் பொறியியல், ஆட்டோமொபைல் பொறியியல், கணினி பொறியியல், மின்னணு மற்றும் செயற்கை நுண்ணறிவு, இயந்திரம் கற்றல் போன்ற பல்வேறு துறைகளை கொண்டு கல்விச் சேவையாற்றி வருகிறது.ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரிஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேசியத் தர மதிப்பீட்டுக் குழுவின் 'ஏ' தரச் சான்றிதழ் பெற்று, 32 இளங்கலைப் படிப்பினையும் 11 முதுகலைப் பட்டப் படிப்பினையும், ஒரு ஒருங்கிணைந்த 5 ஆண்டு மென்பொருள் பட்டப்படிப்பினையும் வழங்கி, 9000-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு பிரமாண்டமாக இயங்கி வருகிறது. என்.ஐ.ஆர்.எப்., 2024 கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில் 37வது இடத்தைப் பிடித்துள்ளது.ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரிஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய இயற்கையான சூழலில், 2015ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கோவை பாரதியார் பல்கலை மற்றும் பல்கலை மானியக்குழு அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.