உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய அளவிலான போட்டியில் பதக்கம்  பெற்ற போலீசுக்கு பாராட்டு 

தேசிய அளவிலான போட்டியில் பதக்கம்  பெற்ற போலீசுக்கு பாராட்டு 

கோவை: டில்லியில் நடந்த தேசிய அளவிலான சைக்கிளிங் போட்டியில், பதக்கம் வென்ற கோவை மாவட்ட போலீர்காரரை, எஸ்.பி., கார்த்திகேயன் பாராட்டினார். போலீசாருக்கான அகில இந்திய அளவிலான தடகளம் மற்றும் சைக்கிளிங் கிளஸ்டர் போட்டி டில்லியில் நடந்தது. இப்போட்டியில், நாடு முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போலீசார் பங்கேற்றனர்.ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட தடகளப்போட்டிகளும், சைக்கிளிங் போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டியில் பங்கேற்ற, மாவட்ட போலீஸ் ஆயுதப்படை காவலர் சிவப்பிரகாஷ் 50 கி.மீ., சைக்கிளிங் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். பதக்கம் வென்ற சிவப்பிரகாசை, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ