மாகாளியம்மன் கோவிலில் வரும் 8ல் கும்பாபிஷேகம்
நெகமம்; நெகமம் அருகே உள்ள பனப்பட்டியில், விநாயகர் பாலமுருகன், மாகாளியம்மன், நவக்கிரக கோவில் கும்பாபிஷேக விழா நாளை, நிகழ்ச்சி, வரும் 6ம் தேதி துவங்குகிறது. இதில், மங்கள இசை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை, முதற்கால யாக பூஜைகள் நடக்கிறது.வரும், 7ம் தேதி, இரண்டாம் கால யாக பூஜை, சூரிய பூஜை, வேதிகார்ச்சனை, கோபுர கலசம் நிறுவுதல், மூலமந்திர ஹோமம், மூன்றாம் கால யாக பூஜை, சுவாமிக்கு விசேஷ உபசார பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்வு நடக்கிறது.வரும், 8ம் தேதி, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம், விநாயகர், பாலமுருகன், மாகாளியம்மன் ஆலய விமான கோபுரம் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் மற்றும் அபிஷேகம், அலங்காரம், தசதானம், தசதரிசனம், மகாதீபாராதனை நடக்கிறது.