மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
02-Aug-2025
கோவை; சென்னனுார் பெருமாள் கோவில் தோட்டத்தில் எழுந்தருளியுள்ள, ஸ்ரீ சித்தலட்சுமி தாயார் சமேத ஸ்ரீ சித்தநாராயண பெருமாள் கோவில் அஷ்ட பந்தன கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது. காலை 6.30 மணிக்கு மங்கள இசை, சுப்ரபாதத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாகம், பிராண பிரதிஷ்டை, திரவ்யாஹூதி, பூர்ணஹூதி சாற்றுமுறை, காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு விமான கலசத்துக்கும், மூலாலாயம், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. பொகளூர் சுதர்சன பட்டாச்சாரியர் தலைமையிலான வேதிகர்கள் கும்பாபிஷேகத்தை நிகழ்த்துகின்றனர்.
02-Aug-2025