உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுண்டக்காமுத்துாரில் நாளை கும்பாபிஷேகம்

சுண்டக்காமுத்துாரில் நாளை கும்பாபிஷேகம்

தொண்டாமுத்துார்; சுண்டக்காமுத்துார் பஸ் ஸ்டாப் பின்புறம், பழமை வாய்ந்த ஸ்ரீ அரங்கநாதர் கோவில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா, 28ம் தேதி, முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. நேற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க, திருக்குடங்கள் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, மாலையில், ஆதிமூல விநாயகர் கோவிலில் இருந்து, கலசங்கள் மற்றும் முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இன்று காலை, முதல்கால வேள்வி பூஜை, மாலை, இரண்டாம் கால வேள்வி பூஜை, நாளை (செப்., 4) காலை 8.05 முதல் 9.15 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை