கும்பாபிேஷகம்; போக்குவரத்து வழித்தடம் மாற்றம்
பொள்ளாச்சி; ஆனைமலை மாசாணியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நாளை நடக்கிறது. கும்பாபிேஷகம் காணவும், அம்மனை தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதற்கேற்ப, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போலீசார், கோவில் நிர்வாகத்தினர், பேரூராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.பாதுகாப்பு நடவடிக்கை, மாற்று வழித்தடங்களை கோவை டி.ஐ.ஜி.,சரவணசுந்தர் ஆய்வு செய்தார். அப்போது, எஸ்.பி., கார்த்திகேயன், டி,எஸ்.பி., ஸ்ரீநிதி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.வழித்தடங்கள் மாற்றம், பஸ் ஸ்டாண்ட் ஒதுக்கீடு, பார்க்கிங் பகுதிகள், இன்று, நள்ளிரவு முதல், நாளை 12ம் தேதி வரை அமலுக்கு வருகிறது, என, போலீசார் தெரிவித்தனர். வழித்தடங்கள்
* பொள்ளாச்சியில் இருந்து வேட்டைகாரன்புதுார், சேத்துமடை, காளியாபுரம், டாப்சிலிப் செல்லும் கனரக, இலகுரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும், கோட்டூர், பொங்காளியூர், மயிலாடுதுறை, பொன்னாலம்மன்துறை வழியாக செல்ல வேண்டும்.* டாப்சிலிப் காளியாபுரம், சேத்துமடை, வேட்டைகாரன்புதுாரில் இருந்து பொள்ளாச்சி செல்லும் கனரக, இலகுரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் பொன்னாலம்மன்துறை, மயிலாடுதுறை, பொங்காளியூர், கோட்டூர் வழியாக செல்ல வேண்டும்.* உடுமலை, நா.மூ.சுங்கம், சங்கம்பாளையம், ஆனைமலை வழியாக கேரளா நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள், இலகுரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் நா.மூ.சுங்கம், பொள்ளாச்சி வழியாக கேரளா செல்ல வேண்டும்.* கேரளாவில் இருந்து மீன்கரை சாலை வழியாக கிழவன்புதுார், செம்மேடு வழியாக ஆனைமலை செல்லும் கனரக மற்றும் இலகுரக வாகனங்களுக்கு அனுமதியில்லை.* ராமசந்திராபுரம் ரோடு வழியாக இலகு மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதியில்லை.* கோவிலுக்கு வரும் அனைத்து வாகனங்களும், அம்பராம்பாளையம் வழியாக தான் வர வேண்டும்.* வேட்டைக்காரன்புதுார் பிரிவு, அம்பராம்பாளையம் மற்றும் அய்யாமடை பிரிவு ஆகிய பகுதிகளில் கோவிலுக்கு வரும் வாகனங்களைத் தவிர வேறு வாகனங்களுக்கு அனுமதியில்லை, என, அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட்கள்
* மதுரை, திண்டுக்கல், பழநி மார்க்கமாக, ஆனைமலை வரும் அனைத்து அரசு பஸ்களும் நா.மூ.சுங்கம், சங்கம்பாளையம், அய்யாமடைபிரிவு, ஆனைமலை முக்கோணம் வழியாக முரளி மருத்துவமனைக்கு எதிரே உள்ள தற்காலிக பஸ் ஸ்டாண்டில் நிறுத்த வேண்டும். அதே போல, தென்மாவட்டங்களுக்கு திரும்பி செல்லும் வாகனங்கள் இதே வழியை பயன்படுத்த வேண்டும்.* வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள், நா.மூ.சுங்கம், சங்கம்பாளையம், அய்யாமடைபிரிவு, ஆனைமலை முக்கோணம், ஆனைமலை பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று பயணியரை இறக்கி, ஏற்றிக் கொண்டு, திரும்ப வந்த அதே வழியில் செல்ல வேண்டும்.* தாத்துார் பிரிவில் இருந்து ஆனைமலை செல்லும் இலகுரக வாகனங்கள், எல்.ஆர்.டி., அருகே தனியாருக்கு சொந்தமான தற்காலிக பஸ் ஸ்டாண்ட், மற்றும் கோ-ஆபரேட்டிவ் வங்கி பின்னால் உள்ள 'பார்க்கிங்' இடங்களில் நிறுத்த வேண்டும்.என, அறிவுறுத்தியுள்ளனர்.