மைதானம் மாரியம்மன் கோவிலில் இன்று குண்டம் விழா
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவிலில், இன்று குண்டம் இறங்கும் விழா நடைபெற உள்ளது.மேட்டுப்பாளையம் நகரில், ஊட்டி சாலையில் உள்ள காந்தி மைதானத்தில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட, மிகவும் பழமையான மைதானம் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குண்டம் மற்றும் தேர்த் திருவிழா, கடந்த மாதம், 25ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று இரவு குண்டம் திறந்து, தீ வளர்க்கப்பட்டது. இன்று காலை, 8:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் சுவாமி அழைப்பும், 8:30 மணிக்கு குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது. ஒன்பதாம் தேதி மாலை, 4:30 மணிக்கு அம்மன் சுவாமி தேரோட்டம நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி செய்து வருகிறார். * மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட ஊமப்பாளையத்தில், குண்டத்து காளியாதேவி கோவில் உள்ளது. இக்கோவிலின், 37ம் ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த மாதம், 25ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. நேற்று அம்மன் சுவாமி அழைத்து வரப்பட்டது. இன்று இரவு ஊமப்பாளையம் விநாயகர் கோவிலில் இருந்து, சக்தி கரகங்களும், அக்னி சட்டியும் அழைத்து வரப்பட உள்ளது. பின்பு குண்டம் திறக்கப்பட உள்ளது. நாளை ஒன்பதாம் தேதி காலை, 6:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், அதைத் தொடர்ந்து குண்டம் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளது.விழாவுக்கான ஏற்பாடுகளை தலைமை பூசாரி பழனிசாமி, அருள் வாக்கு பூசாரி காளியம்மாள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.