வழிப்பறி திருடன் மீது பாய்ந்தது குண்டாஸ்
கோவில்பாளையம்: கோவையைச் சேர்ந்தவர் பிரதீப், 22. இவர் கோவில்பாளையம் பகுதியில் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதால், இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை ரூரல் போலீஸ் எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரை செய்தார்.இதை ஏற்று கலெக்டர் கிராந்தி குமார் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். சிறையில் உள்ள பிரதீப்பிடம் குண்டர் தடுப்பு சட்ட உத்தரவு நகல் வழங்கப்பட்டது.