வனபத்ரகாளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த குத்துவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் விழா, கடந்த மாதம், 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 27ம் தேதி கொடியேற்றமும், 29ம் தேதி குண்டம் இறங்குதலும் நடைபெற்றது. நேற்று காலை கோவில் நடை திறந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்பு, 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது.மேட்டுப்பாளையம் சுப்ரமணியர் கோவில் குருக்கள் தனசேகர், கண்ணன் ஆகியோர் குத்துவிளக்கு வழி நடத்தினர். இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இன்று மறு பூஜை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.