உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லட்சுமி நரசிங்க பெருமாள் பிரம்மோத்ஸவ விழா துவக்கம்

லட்சுமி நரசிங்க பெருமாள் பிரம்மோத்ஸவ விழா துவக்கம்

பெ.நா.பாளையம்; நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயிலில், 7ம் ஆண்டு பிரம்மோத்ஸவ கொடியேற்று விழா இன்று நடக்கிறது. இன்று காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம், தொடர்ந்து திருமஞ்சனம், சிம்ம வாகனம் புறப்பாடு, ஹம்ச வாகனம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை காலை, 8:00 மணிக்கு சூரிய பிரபை வாகனம், திருமஞ்சனம், கருட வாகனம், அனுமந்த வாகனம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வியாழக்கிழமை காலை, 8:00 மணிக்கு யாழி வாகனம் புறப்பாடு, திருமஞ்சனம், நாச்சியார் திருக்கோலம், சந்திர பிரபை வாகனம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வெள்ளிக்கிழமை காலை, 8:00 மணிக்கு கற்பக விருட்சகம் வாகனம் புறப்பாடு, திருமஞ்சனம், யானை வாகனம், மாலை திருத்தேர் நிகழ்ச்சி நடக்கிறது. சனிக்கிழமை காலை, 8:00 மணிக்கு குதிரை வாகனம் புறப்பாடு, திருமஞ்சனம் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை, 8:00 மணிக்கு திருமஞ்சனம், தீர்த்தவாரி, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி