மேலும் செய்திகள்
கோவை புறநகரில் கோவில் விழாக்கள் கோலாகலம்
10-Apr-2025
மைதானம் மாரியம்மன் கோவிலில் இன்று பூச்சாட்டு
25-Mar-2025
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் பங்களா மேட்டில் உள்ள, மகா சக்தி மாரியம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது.இக்கோவிலில் கடந்த எட்டாம் தேதி, திருவிழா பூச்சாட்டு நடந்தது. அக்னி கம்பம் நடப்பட்டு, திருவிளக்கு பூஜை நடந்தது. மூலத்துறை அர்ச்சகர் சரவணன், திருவிளக்கு பூஜையை வழி நடத்தினார். ஏராளமான பெண்கள் மற்றும் சிறுமியர், விளக்கிற்கு பூக்கள், குங்குமம் ஆகியவற்றை படைத்து வழிபட்டனர்.முன்னதாக, மூலவர் அம்மன் சுவாமிக்கு, மஞ்சள் அலங்காரம் செய்யப்பட்டது. இன்று (20ம் தேதி) ராஜபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில், கரகம், பூச்சட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. அன்று இரவு ராஜா மகா சக்தி வள்ளிக்கும்மி குழுவினரின் அரங்கேற்ற நிகழ்ச்சி, கோவில் வளாகத்தில் நடைபெற உள்ளது.22ம் தேதி அம்மன் அழைப்பும், 23ம் தேதி சக்தி விநாயகர் கோவிலில் இருந்து, பால்குடம் எடுத்து வருதலும், மதியம் அலங்கார பூஜையும், மாவிளக்கு எடுத்தலும் நடைபெற உள்ளது.24ம் தேதி மஞ்சள் நீராட்டும், 25ம் தேதி மறு பூஜை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
10-Apr-2025
25-Mar-2025