உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளைச்சல் அதிகம் கிடைக்க களர் நிலம் சீரமைப்பு அவசியம்

விளைச்சல் அதிகம் கிடைக்க களர் நிலம் சீரமைப்பு அவசியம்

மேட்டுப்பாளையம்; களர் நிலத்தை சீரமைப்பு செய்தால் விளைச்சல் அதிகம் கிடைக்கும் என வேளாண்மை துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கி வருகிறது.காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறியதாவது:-மண்ணில் இடப்படும் உரங்கள் அதிகமாகும்போது, மேற்பரப்பில் உள்ள மண் இறுக்கமடைந்து, அதில் உப்பு படிதல் அதிகமாக ஏற்படுகிறது.மேலும், மண்ணில் சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், மக்னீசியம் கார்பனேட் உப்புக்கள் அதிக அளவில் இருந்தால் அந்த நிலம் களர் நிலமாக கருதப்படுகிறது. இந்நிலத்தில் கோடையில் மண் இறுகியும், மழைக்காலத்தில் குலைந்தும் இருப்பதால், மண் காற்றோட்டம் குறைந்து வேரின் சுவாசம், வளர்ச்சி போன்றவை பாதிபடைகிறது. பயிரின் வளர்ச்சி குறைந்து, இலைகளில் தழைச்சத்து, துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.இதை தவிர்க்க களர் நிலத்தை சமன் செய்து சிறு, சிறு பகுதிகளாக பிரித்து, வரப்புகளை நீர் தேங்கும் அளவுக்கு உயர்த்த வேண்டும். மண் ஆய்வு செய்து, பரிந்துரைத்த அளவின் படி ஜிப்சத்தை பாத்திகளில் பரப்பி நீர் பாய்ச்சி உழ வேண்டும். பூண்டு, புங்கம் மற்றும் வேம்பு இலைகளை ஏக்கருக்கு ஆறு டன் வீதம் இடவேண்டும். இயற்கை உரங்களான தொழு உரம், மண்புழு உரம், தென்னை நார்கழிவு அதிக அளவு பயன்படுத்த வேண்டும். இதனால் விளைச்சல் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி