லதாங்கி வித்யா மந்திர் பள்ளி; பிளஸ் 2 தேர்வில் சாதனை
பொள்ளாச்சி; பொள்ளாச்சி லதாங்கி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவி அபிநயா, 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ேஷாபிகா - 591 (இரண்டாம் இடம்), மாணவி ரிதன்யா, மாணவர் குருபிரசாத் ஆகியோர் தலா, 589 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாமிடம் பிடித்தனர்.மாணவி தருணிகாஸ்ரீ, மாணவர் ஹர்ஷவர்தன் ஆகியோர் தலா, 588 மதிப்பெண்களுடன் நான்காமிடமும்; மாணவி மகாலட்சுமி, மாணவர் அபிநவ், ந.குருபிரசாத் ஆகியோர் தலா, 586 மதிப்பெண்கள் பெற்று ஐந்தாமிடம் பிடித்தனர்.மாணவர்கள் 46 பேர், பாடங்களில் சதம் அடித்தனர். மாணவர் பா.க.குருபிரசாத் ஆங்கிலத்தில், 100 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றார். 18 பேர் 580 மதிப்பெண்களுக்கு மேல், 550 மதிப்பெண்களுக்கு மேல் 38 பேர், பெற்று சாதனை படைத்துள்ளனர்.தேர்வு எழுதிய, 193 மாணவர்களில், 125 மாணவர்கள், 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றனர்.சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும், பள்ளி செயலர் ரமேஷ் ராஜ்குமார், பள்ளி தாளாளர் சாந்திதேவி, நிர்வாக இயக்குனர் ரிதன்யா, பள்ளி முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பாராட்டினர். வரும் கல்வியாண்டு முதல் அறிவியல் பாடப்பிரிவு (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்) துவங்கப்பட உள்ளது என பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.