மேலும் செய்திகள்
வழக்கு சமரச விழிப்புணர்வு பேரணி
10-Apr-2025
கோவை; மாவட்ட சமரச தீர்வு மையம் சார்பில், சமரச தினம் நிகழ்ச்சி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. சமரச தீர்வு மைய தலைவர் மற்றும் கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட் நீதிபதி விஜயா, சமரச தீர்வு தொடர்பான விழிப்புணர்வு பலகை திறந்து வைத்து, வாகன பிரசாரத்தை துவக்கினார். விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. வக்கீல்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், நீதிபதிகள், வக்கீல்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
10-Apr-2025