| ADDED : டிச 10, 2025 07:51 AM
கோவை: தமிழகம், புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டுக்குழு, தீர்மானத்தின் படி, இ - பைலிங் முறையை கண்டித்து, பல்வேறு கட்டமாக பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவையில் நான்கு நாட்கள் வக்கீல்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். நேற்று காலை நீதிமன்ற வாயில் முன், வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். இ - பைலிங் முறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நீதிமன்றங்களில் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வரை, இ - பைலிங் முறையை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தப்பட்டது. போராட்டம் காரணமாக நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது. போராட்டத்துக்கு, கோவை வக்கீல்கள் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் சுதீஷ், பார் கவுன்சில் துணைத் தலைவர் அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.