உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாதவிடாய் நாட்களில் விடுப்பு; மத்திய அரசை அணுக அறிவுரை

மாதவிடாய் நாட்களில் விடுப்பு; மத்திய அரசை அணுக அறிவுரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'மாதவிடாய் நாட்களில், மாணவியர் மற்றும் பணியில் உள்ள பெண்களுக்கு, மருத்துவ சான்று இல்லாமல் விடுப்பு வழங்குவது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது' என்று, சென்னை உயர் நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்த அய்யா என்பவர் தாக்கல் செய்த மனு:

மாதவிடாய் காலங்களில், பணிக்கு வரும் பெண்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். மாதவிடாய் என்பது நோய் அல்ல; அதற்கு மருத்துவ சான்று பெறுவது இயலாதது என்பதால், மருத்துவ சான்று இல்லாமல் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.பீகாரில் மாதவிடாய் காலங்களில், பெண்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது. கேரளாவில், பள்ளி, கல்லுாரி மாணவியருக்கு விடுப்பு வழங்கப்படுகிறது. அங்குள்ள சில தொலைக்காட்சி மற்றும் தனியார் நிறுவனங்களும், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுப்பு வழங்குகின்றன. அதேபோல, தமிழகத்தில் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு வழங்க கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்'' மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து கொள்கை வகுக்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட கோரிய வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுசம்பந்தமாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை அணுகும்படி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது என்று சுட்டிக்காட்டி, மனுவை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை