மேலும் செய்திகள்
படைவீரர்களுக்கு சட்ட உதவி
23-Aug-2025
கோவை; முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சட்ட உதவிகள் வழங்குவதற்காக, இலவச சட்ட உதவி மையம் அமைக்க தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், கோவை கோர்ட் எதிரிலுள்ள முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகமான ஜவான் பில்டிங்கில் சட்ட உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை 9:30 மணிக்கு நடக்கிறது. மாவட்ட நீதிபதி விஜயா, சட்ட உதவி மையத்தை திறந்து வைக்கிறார்.
23-Aug-2025