உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறை கைதிகளுக்கு சட்ட விழிப்புணர்வு

சிறை கைதிகளுக்கு சட்ட விழிப்புணர்வு

கோவை : ஒண்டிப்புதுாரில் உள்ள திறந்த வெளி சிறையில், கைதிகளுக்கு நீதிபதி சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர், சார்பு நீதிபதி ரமேஷ், ஒண்டிப்புதுாரிலுள்ள திறந்த வெளிசிறையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளுக்கு, சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிறை வாசிகளுடன் கலந்துரையாடிய நீதிபதி, சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் செய்யப்படும் சட்ட உதவிகள் குறித்து விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி