உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு தீவிரம்

தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு தீவிரம்

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தில், பொது சுகாதாரத்துறை வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடு வீடாகச் சென்று, தொழுநோய் பரிசோதனை கணக்கெடுப்பு பணியும் மேற்கொள்ளப்படுகிறது.கெங்கம்பாளையம் அரசு நடுநிலை பள்ளியில், தொழுநோய் ஒழிப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளித் தலைமையாசிரியர் கலையரசி தலைமை வகித்தார். வட்டார மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லதுரை முன்னிலையில், தோல்நோய் குறித்த துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.மேலும், தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியும் ஏற்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சாந்தகுமார், ஆசிரியர் ஜெயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதனைத்தொடர்ந்து, வாழைக்கொம்புநாகூர் அரசு நடுநிலை பள்ளியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, புதிதாக ஒரு நோயாளி கண்டறியப்பட்டால், அவர்களுக்கு முறையான கூட்டு மருந்து சிகிச்சை அளித்து, நோயை குணப்படுத்தலாம் என, தெரிவிக்கப்பட்டது. சுகாதார ஆய்வாளர்கள் அருணாச்சலம், சரத், விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ