உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறைந்தது மழைப்பொழிவு; நீர்மட்டம் சரிவு

குறைந்தது மழைப்பொழிவு; நீர்மட்டம் சரிவு

வால்பாறை; குறைந்து வரும் மழைப்பொழிவால், பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. வால்பாறையில், கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப்பருவ மழை துவங்கியது. தொடர்ந்து பெய்த கனமழையால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை, இந்த ஆண்டில் ஆறு முறை நிரம்பியது. இதே போல் ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளும் நிரம்பியதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக வால்பாறையில் பருவமழை முற்றிலுமாக குறைந்து, வெயில் நிலவி வருகிறது. இதனால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்து வருவதோடு, பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டமும் சரிந்து வருகிறது. வால்பாறையில் மழைப்பொழிவு குறைந்துள்ள நிலையில், சுற்றுலாபயணியர் வருகையும் அதிகரித்துள்ளது. சிறுகுன்றா கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாபயணியர் தொடர்ந்து குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மழைப்பொழிவு குறைந்த நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 158.90 அடியாக சரிந்தது. இதே போல், 120 அடி உயரமுள்ள ஆழியாறு அணையின் நீர்மட்டம், நேற்று காலை, 118.70 அடியாகவும், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம், 71.81 அடியாகவும் குறைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ