உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டில் குழந்தைகளை விளையாட விடுங்க! படிப்பு தானாக வரும் என்கிறார் உடற்கல்வி ஆய்வாளர்

வீட்டில் குழந்தைகளை விளையாட விடுங்க! படிப்பு தானாக வரும் என்கிறார் உடற்கல்வி ஆய்வாளர்

கோவை; குழந்தைகள் கற்றலில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றால், அதை வேடிக்கையாக மாற்றுவது முக்கியம். அதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, விளையாட்டு முறை கல்வி என்கிறார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர். இன்றைய கல்வி முறை, குழந்தைகளின் கல்வி சுமையை குறைத்து, அவர்களது சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையில், மாறி வருகிறது. பல பள்ளிகள் இதை ஏற்று, பாடங்களை விளையாட்டுகள், செயல்பாடுகள், கதைப்பாடங்கள் மற்றும் படங்களின் மூலம் கற்பிக்கின்றன. இதன் மூலம், குழந்தைகள் விளையாடிக் கொண்டே கற்றுக்கொள்கிறார்கள். இது பள்ளியில் மட்டும் நடைமுறைக்கு வந்தால் பத்தாது; வீட்டுச்சூழலிலும் தினசரி செயல்களில் பயன்படுத்தினால் மட்டுமே, குழந்தைகள் முழுமையான கற்றல் அனுபவத்தை பெற முடியும் என்கின்றனர் நிபுணர்கள். கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன் கூறியதாவது: சாதாரணமாக, படிப்பு என்றாலே புத்தகங்கள், தேர்வுகள், ஒழுங்கான அமர்வு என்ற புரிதல் உள்ளது. உண்மையில் குழந்தைகள் கற்பது அனுபவங்களின் வழியாகவே. இதில், விளையாட்டு முக்கியமான கருவி. விளையாட்டில் ஈடுபடும்போது குழந்தைகள், ஒழுக்கம், ஒத்துழைப்பு, பொறுமை, தோல்வியை ஏற்கும் தன்மை, வெற்றியை பகிரும் மனம் போன்ற வாழ்வின் முக்கிய கோட்பாடுகளை, இயல்பாகவே கற்றுக்கொள்கிறார்கள். படிப்பிலும் ஆர்வம் அதிகரிக்கும். இதை பெற்றோர் உணர்ந்து செயல்பட்டால், குழந்தைகளை கட்டாயப்படுத்தி படிக்க வைக்க வேண்டியதில்லை. சுருக்கமாகச் சொன்னால், மொபைல்போன் தவிர்த்து, வீட்டில் விளையாடிக் கொண்டே படிக்க அனுமதி கொடுங்கள். அதுவே, அவர்களின் கல்விப் பயணத்தில், முதல் கட்டத்தை இனிமையாக்கும். விளையாட்டு கல்வி முறை என்பது, பாடநெறி மட்டுமல்ல; வாழ்வியல் அணுகுமுறையும் கூட. இவ்வாறு, அவர் கூறினார். விளையாட்டு முக்கியமான கருவி. விளையாட்டில் ஈடுபடும்போது குழந்தைகள், ஒழுக்கம், ஒத்துழைப்பு, பொறுமை, தோல்வியை ஏற்கும் தன்மை, வெற்றியை பகிரும் மனம் போன்ற வாழ்வியல் முக்கியத்துவங்களை, இயல்பாகவே கற்றுக்கொள்கிறார்கள். படிப்பிலும் ஆர்வம் அதிகரிக்கும். இதை பெற்றோர் உணர்ந்து செயல்பட்டால், குழந்தைகளை கட்டாயப்படுத்தி படிக்க வைக்க வேண்டியதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !