உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடி வெள்ளியில் அம்பாளை தியானிப்போம்; அனைத்துலகமும் இன்பமுற வழிபடுவோம்

ஆடி வெள்ளியில் அம்பாளை தியானிப்போம்; அனைத்துலகமும் இன்பமுற வழிபடுவோம்

கோவை; ஆடிவெள்ளியை ஒட்டி இன்று கோவையிலுள்ள அம்பாள் மற்றும் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. ஆடி மாதம் மனிதர்கள் தாங்கள் செய்த கர்மாக்களிலிருந்து விடுபடுவதற்கு வழிவகை செய்யும் மாதமாகும். அதனால் தான் இம் மாதத்தில் விரதம் இருந்து, பக்தியுடன் வழிபட்டால் கேட்ட வரங்கள் கிடைக்கும். வாழ்க்கையும் வளமாகும்.ஆடி வெள்ளியில் அம்மனின் அருள் நிலைத்து நீடிக்க செய்யும் பூரணகும்ப வழிபாடுகளை மேற்கொண்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். ஆடி மாதம் முழுக்க அம்பிகை வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஆடி வெள்ளியில் அம்பிகையை பூஜை செய்து வழிபட்டால் நன்மைகளை பெற முடியும்.ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான வழிபாடுகளில் ஒன்று ஆடி வெள்ளி வழிபாடு. ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளியிலும் அம்பிகையை வழிபட முடியாதவர்கள் கூட ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் குறிப்பிட்ட வழிபாட்டினை செய்வதால் ஆடி மாதம் முழுவதும் அம்பிகையை வழிபட்ட பலனை பெறலாம்.ஆடி முதல் வெள்ளியை ஒட்டி ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள், ஆர்.எஸ்.புரம்., காமாட்சிஅம்பாள், அன்னபூர்னேஸ்வரி, பெரியகடைவீதி கோனியம்மன், அவிநாசிசாலை தண்டுமாரியம்மன், பெரியகடைவீதி மாகாளியம்மன், தர்மராஜகோவில் வீதி காளியம்மன் கோவில்களில் அம்பாளுக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாளிக்கின்றனர்.இந்நாளில் அம்பாளை தியானித்து வழிபட்டால் நாம் வாழுமிடம் செழிப்பாகும். அதனால் இன்று பெரும்பான்மையான சுமங்கலி பெண்கள் சிறப்பு வழிபாட்டுக்கு நேரம் ஒதுக்கி சிறப்பு வழிபாடு மேற்கொள்கின்றனர்.இ.ம.க.,சார்பில் கோனியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா காலை 10 மணிக்கு நடக்கிறது. ஆடிவெள்ளிவிழா திருவிழா போல விமரிசையாக இன்று நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை