வெல்வோம் முதுமை: உறக்கமின்மை, மலச்சிக்கல் பிரச்னைகள் ஓடியே போய் விடும்! வழிகாட்டுகிறார் டாக்டர் தாமரை செல்வன்
வயதாக துவங்கும் போது கை, கால் வலி, மலச்சிக்கல், துாக்கமின்மை என பல பிரச்னைகளுக்கு முதியவர்கள் உள்ளாகின்றனர். இதற்கான காரணங்களையும், அதில் இருந்து விடுபடவும் ஆலோசனை சொல்கிறார், மூத்த ஹோமியோபதி டாக்டர் தாமரை செல்வன்.வயதாகும் போது ஆண்கள், பெண்களுக்கு கை, கால் வலி, எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது. முதியவர்கள் வீடுகளிலேயே இருப்பதால், அவர்களுக்கு 'வைட்டமின் டி' கிடைப்பது இல்லை. இரும்பு போன்று உள்ள எலும்புகள், முருங்கைக்காய் போன்று மாறி விடுகிறது. தனிமை, மன அழுத்தம், காரணமாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் வந்து விடுகிறது. 50 வயதை கடக்கும் போது, அடிக்கடி சிறுநீர் போக்கு ஏற்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை இறக்கம், ரத்த சோகை ஏற்படும். ஜீரண கோளாறு, மலச்சிக்கல் பிரச்னையும் வரும். இதற்கு சிறந்த தீர்வு, ஆரோக்கியமான உணவு முறை தான். கீரை, காய்கறி, சிறுதானிய உணவை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாவுசத்து பொருட்களை குறைத்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு கப் கீரை உட்கொள்ள வேண்டும். சுக்கு மிளகு, திப்பிலி, ஓமம், சீரகம் ஆகியவற்றை சேர்த்து பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.மலச்சிக்கல் உள்ளவர்கள் கொடுக்காப்புளியை, இரவு உட்கொண்டால் தீர்வு கிடைக்கும். வயதாகும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் சளி, காய்ச்சல் வரும். அதற்கு கொள்ளு, மிளகு ரசம் நல்லது. வயிற்றில் கிருமிகள் தங்காது. தேன், மிளகு, மஞ்சள் கலந்து சாப்பிட்டால் தொண்டையில் பிரச்னை நீங்கும். வெளியே செல்லும் போது, அளவான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.சுகாதாரமான தண்ணீரை குடிக்க வேண்டும். கண்ட தண்ணீரில் வாய் கொப்பளிக்கக் கூடாது. உடலுக்கு அசைவு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அசதி ஏற்பட்டு இரவில் துாக்கம் வரும். வயது ஒரு பிரச்னை கிடையாது. நல்ல புத்தகங்களை படிக்கலாம். கவலைகள் வேண்டாம். பயம் வேண்டாம். குடும்ப டாக்டர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல உணவு நோய்களை விரட்டும்; புதிய நோய்கள் வராமல் பாதுகாக்கும். இது குறித்தெல்லாம் இலவச ஆலோசனை தேவைப்படுவோர், 94430 60609 என்ற எண்ணில், என்னை அழைக்கலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.உடலுக்கு அசைவு கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் அசதி ஏற்பட்டு இரவில் துாக்கம் வரும். நல்ல புத்தகங்களை படிக்கலாம். கவலைகள் வேண்டாம். பயம் வேண்டாம். குடும்ப டாக்டர்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். நல்ல உணவு நோய்களை விரட்டும்; புதிய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.