மாவட்ட மைய நுாலகத்தில் நுாலகர் தினவிழா
கோவை; கோவை ஆர்.எஸ்.புரம் கவுலிபிரவுன் ரோட்டில் உள்ள மாவட்ட மைய நுாலகத்தில் நுாலகர் தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட நுாலக அலுவலர் ராஜேந்திரன் விழாவுக்கு தலைமை வகித்து பேசுகையில், ''நுாலக இயக்கத்தின் தந்தையாக போற்றப்படும் எஸ்.ஆர்.ரங்கநாதன் பிறந்த தினம் தேசிய நுாலக தினமாக கொண்டாடப்படுகிறது.கோவையில் உள்ள நுாலகங்களை தினமும் பல ஆயிரம் வாசகர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.'' என்றார். சமூக ஆர்வலர் ஷர்மிளா பானு, வரலாற்று ஆய்வாளர் இளங்கோவன், கண்காணிப்பாளர் ஜெயகாந்தி, இரண்டாம் நிலை நூலகர் வித்யாபோஸ், நூலக ஆய்வாளர் கணேசன், நுால் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர்.