உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரு இடங்களில் லேசான தடியடி

இரு இடங்களில் லேசான தடியடி

கோவை;புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, இரு இடங்களில் போலீசார் சிறியளவில் தடியடி நடத்தினர்.புத்தாண்டு கொண்டாட்டங்கள், கோவையின் பல்வேறு பகுதிகளிலும் நடந்தன. இதை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவை கோட்டைமேடு பகுதியில் பிரியாணி வாங்குவதற்காக, நள்ளிரவில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.இதையடுத்து, போலீசார் ஒலிபெருக்கியில் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் கலைந்து செல்லாததால், லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.இதேபோல், ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி, அவர்களை கலைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி