உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாமாயிலுக்கு பதிலாக உள்ளூர் எண்ணெய்; விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பாமாயிலுக்கு பதிலாக உள்ளூர் எண்ணெய்; விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

- நமது நிருபர் -கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதிலாக உள்ளூர் எண்ணெய் வழங்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக தமிழக அரசை வலியுறுத்தி வருகிறது. ஆனால், நடவடிக்கை எதுவும் இல்லாததால், பொங்கலுார் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாநகர் மாவட்ட செயலாளர் ரவி முன்னிலை வகித்தனர். மாநிலத் தலைவர் சண்முகம் பேசியதாவது: பாமாயிலை, 150 ரூபாய்க்கு கொள்முதல் செய்து அதற்கு மேலும், 150 செலவு செய்து, 300 ரூபாய்க்கு வாங்கி, 275 ரூபாய் மானியம் கொடுக்கின்றனர். அதனை உள்நாட்டு விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும். கடந்தாண்டு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தினோம். அப்போது கோரிக்கையை பரிசீலிப்பதாக தமிழக அரசு கூறியது,'' ''போராட்டத்தை கைவிட்டதால் அரசு கிடப்பில் போட்டுள்ளது. கோரிக்கையை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தி வருகிறோம். பதில் சொல்லாவிட்டால் சென்னையில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு, பேசினார். த.மா.கா. மாவட்ட பொறுப்பாளர் வரதராஜ், ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, அ.தி.மு.க. பொங்கலுார் மேற்கு, கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் பழனிசாமி, பிரகாஷ், ஒன்றிய துணைச் செயலாளர் தங்கவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

மணிமுருகன்
அக் 02, 2025 00:20

அருமை பாமாயில் என்பது இறக்குமதி வர்த்தக மாற்றுப் பொருள் தா ய்லாந்த் பிலிப்பைன்ஸ் இரு நாட்டில்லா ஒரு நாடா என்பது ஞாபகமில்லை ஆனால் ்இறக்குமதி செய்யப்படுகிறது என்பது நிச்சயம் பன்னாட்டு வர்த்தக கைள்கை என்றாலும் நம் நாட்டு நிலைமையும் கவனத்தில் கொள்ளவேண்டும் பாமயில் உபயோகத்தை மக்கள் மேல் திணிந்து நோய் வரவைக்காமல் மாற்று வழி காண்பது நன்று உங்கள் கோரிக்கை நிறைவேற வாழ்த்துக்கிறேன்


புதிய வீடியோ