மேலும் செய்திகள்
விபத்துக்கு வழி வகுக்கும் மெகா பள்ளத்தால் அச்சம்
17-Oct-2024
பொள்ளாச்சி ; பொள்ளாச்சி பகுதிகளில் விதிமுறை மீறி நீள 'பாடி' லாரிகளை இயக்குவதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.பொள்ளாச்சியில் புகழ்பெற்ற மாட்டு சந்தை உள்ளது. செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இங்கு சந்தை கூடுகிறது. மாட்டு சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.சந்தையில் இருந்து, கேரளா மாநிலத்துக்கு அதிகளவு மாடுகளை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாடுகள் ஏற்றி வரும் வாகனங்களில், அளவுக்கு அதிகமாக மாடுகள் ஏற்றப்படுவதாகவும், விதிமுறை மீறி வாகனங்களில் நீள 'பாடி' அமைத்து, மாடுகளை கொண்டு வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.வாகனத்தின் நீளம் அளவுக்கு அதிகமாக உள்ளதால், விபத்துகள் சர்வசாதாரணமாக ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இது குறித்து, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணிப்பு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:லாரிகளில் குறிப்பிட்ட அளவை விட, வாகன 'பாடி' நீளத்தை நீட்டிப்பதால் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த வாகனங்களின் பின்னால் வரும் வாகன ஓட்டுனர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. ரோடு திருப்பங்களில், திருப்பும் போது, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.வீலில் இருந்து, ஒன்றரை மீட்டர் அளவுக்கு நீளப்படுத்தப்படுகிறது. இதுபோன்று விதிமுறை மீறலை கண்டுகொள்வதில்லை. இதை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.
17-Oct-2024