உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மா.கம்யூ. கட்சியினர் உடல் தானத்துக்கு ஒப்புதல்

மா.கம்யூ. கட்சியினர் உடல் தானத்துக்கு ஒப்புதல்

கோவை; மறைந்த மா.கம்யூ. முன்னாள் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, காந்திபுரம் மா.கம்யூ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் உடல் தானம் வழங்க விரும்பும் கட்சியினரின், விருப்பப் படிவம் ஒப்படைப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் எம்.பி. நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மனோகரன், அஜய்குமார், கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட 90 பேர், தங் கள் மரணத்துக்கு பின், மருத்துவ ஆராய்ச்சிக்காக உடலை ஒப்படைக்கும், ஒப்புதல் படிவத்தை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை