உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  செல்வ விநாயகர் கோவிலில் 15ல் மகா கும்பாபிஷேகம்

 செல்வ விநாயகர் கோவிலில் 15ல் மகா கும்பாபிஷேகம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் செல்வ விநாயகர் கோவிலில் அஸ்தபந்தன மகா கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிகள், வரும் 14ம் தேதி துவங்குகிறது. அன்று, காலை, 5:00 மணிக்கு, மங்கள இசை, திருநீறு பூஜை, ஜோதி பூஜை, மகா கணபதி பூஜை, வேள்வி, காப்பு கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு, வாஸ்து சாந்தி பூஜை நடக்கிறது. காலை, 10:30 மணிக்கு, சுவாமி திருவீதி உலாவும், மாலை 3:00 மணிக்கு, முளைப்பாரி மற்றும் புனித தீர்த்தம் கொண்டுவரும் நிகழ்வும் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு, கோபுர கலசம் நிறுவப்படுகிறது. இதைத்தொடர்ந்து செல்வ விநாயகர் நிலை நாட்டுதல் நடக்கிறது. வரும், 15ம் தேதி, அதிகாலை 3:30 மணிக்கு, மகா சங்கல்ப பூஜை, செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா வேள்வி நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. காலை, 7:00 மணிக்கு, செல்வ விநாயகர் கோபுர கலசத்துக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் மூலஸ்தான விநாயகருக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 8:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தசதரிசனம், தீபாராதனை நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை