மேலும் செய்திகள்
கருமாரியம்மன் கோவிலில் 20ம் தேதி கும்பாபிேஷகம்
18-Jan-2025
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், உலக மக்கள் நலனுக்காக மங்கள மஹா சதசண்டி யாகம் இன்று (20ம் தேதி) துவங்கி வரும் 26ம் தேதி வரை நடைபெறுகிறது.பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில் புகழ்பெற்ற மகேஸ்வரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மாக்கினாம்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து பொதுமக்கள், பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.இந்நிலையில், மகேஸ்வரியம்மன் கோவிலில், உலக மக்கள் நலனுக்காக மங்கள மஹா சதசண்டியாகம், மஹா ருத்ர யாகம், மஹா நாராயண (லட்சுமி நாராயண) யாகம், இன்று (20ம் தேதி) துவங்கி, 26ம் தேதி வரை நடக்கிறது.இன்று காலை, 9:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா புண்ணியாகவாசனம், மகா கணபதி ேஹாமம், கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, சிறப்பு ேஹாமம் நடக்கிறது. இரவு, 7:40 மணிக்கு தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது.வரும், 21ம் தேதி முதல், 25ம் தேதி வரை, தினமும் காலை, 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், ஸ்ரீ ருத்ர நமக சமக ேஹாமம், மகாபரத்வ நிரூபண ேஹாமம், மகாசண்டி பூஜை, சிறப்பு ேஹாமம் நடக்கிறது.வரும், 26ம் தேதி காலை, 9:00 மணிக்கு விஷ்ணு ேஹாமம், மகா சண்டி மகாயாக பிரகனம், மகாசண்டி சப்தசதி அத்யாய ேஹாமம், மஹா பூர்ணாஹுதி, வேதிகார்ச்சனை, மஹா தீபாராதனை, கலச தீர்த்த வினியோகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை, கார்த்திகேயன் நம்பூதிரி, ஸ்ரீனிவாச சாஸ்த்திரி ஆகியோர் செய்து வருகின்றனர்.இந்த மங்கள மஹா சதசண்டி ேஹாமத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபடலாம்.
18-Jan-2025