உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எலையமுத்துார் ரோட்டில் பாலங்களில் பராமரிப்பு பணி 

எலையமுத்துார் ரோட்டில் பாலங்களில் பராமரிப்பு பணி 

உடுமலை: மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், பாலங்களை பராமரித்து, தடுப்பு சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணி நடக்கிறது. மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பராமரிப்பில், தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய, இதர ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ரோடுகளில், ஓடைகளின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்களை பராமரித்து, தடுப்பு சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, எலையமுத்துார் ரோட்டிலுள்ள பாலங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை