உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புத்தாண்டை வரவேற்ற மலையாள மக்கள்

புத்தாண்டை வரவேற்ற மலையாள மக்கள்

கோவை; தமிழகத்தில் சித்திரை மாதத்தின் முதல் நாள், தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவது போல், கேரளாவில் விஷூ என்ற பெயரில், மலையாள புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. செல்வ ஐஸ்வர்யம் பெருக இந்நாளில், அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகளை மக்கள் மேற்கொள்வர். கோவையில் வசிக்கும் மலையாள மக்கள், விஷூ தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கனி காணுதல் என்ற முக்கியமான நிகழ்வு வழிபாட்டுடன், புத்தாடை அணிந்து புத்தாண்டை வரவேற்றனர்.மாம்பழம், பலா, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, சில்லறைக் காசுகள், பூக்கள், தங்க நகைகள் மற்றும் சிறிய முகக்கண்ணாடி ஆகியவற்றை ஒரு தாம்பாளத்தில் வைத்து, வழிபாடுகளை மக்கள் மேற்கொண்டனர். அதேபோல், இனிப்பு, காரம், புளிப்பு, கசப்பு, உப்பு ஆகிய சுவைகளை உள்ளடக்கிய, 'விஷூ சத்யா' எனப்படும் பாரம்பரிய விருந்து தயார் செய்தும் இறை அருளும், உடல் நலனும் கிடைக்க வேண்டி, மலையாள புத்தாண்டை இனிதே வரவேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை