உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீடு வாடகைக்கு விடுவதாக மோசடி செய்தவர் கைது

வீடு வாடகைக்கு விடுவதாக மோசடி செய்தவர் கைது

கோவை; வீடு வாடகைக்கு விடுவதாக விளம்பரம் செய்து, பலரிடம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கோவை, நீலிக்கோணாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பரத் குமார், 25; எம்.ஏ., ஆங்கிலம் படித்துள்ள இவர், ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வீடு வாடகைக்கு விடப்படும் என விளம்பரம் செய்துள்ளார்.கோவையின் பல்வேறு பகுதிகளில், வீடு வாடகைக்கு இருப்பதாக வீட்டின் புகைப்படங்களுடன் பதிவு செய்திருந்தார். இதைப்பார்த்து வருவோரிடம், அதிக நபர்கள் வீட்டை கேட்டிருப்பதாகவும், முதலில் அட்வான்ஸ் கொடுப்பவர்களுக்கே, வீடு வாடகைக்கு கொடுக்க முடியும் எனவும் கூறி பலரிடம் ரூ. 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை பெற்றுள்ளார்.அதன் பின்னர், பணம் கொடுத்தவர்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். பரத் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ