மேலும் செய்திகள்
தடை புகையிலை பறிமுதல்
17-Jul-2025
அன்னுார்; ஸ்பெஷல் போலீஸ் என்று கூறி மளிகை கடையில் 40 ஆயிரம் ரூபாய் பறித்தவர் கைது செய்யப்பட்டார். அன்னுார் அருகே அ. மேட்டுப்பாளையத்தில் நாராயணசாமி என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். கடந்த 22ம் தேதி மாலையில், இவரது மனைவி மைதிலி, 30. மளிகை கடையில் இருந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் தான் ஸ்பெஷல் போலீஸ் என்றும், உங்கள் கடையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதாக தகவல் வந்துள்ளது என்றும் மிரட்டி உள்ளார். கடையையும், வீட்டையும் சோதனை செய்துள்ளார். அப்போது அவர்கள் அங்கு வைத்திருந்த 40 ஆயிரம் ரூபாயை திருடிவிட்டு தப்பி விட்டார். மைதிலி அன்னுார் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து இதே போல் பல இடங்களில் மோசடி செய்த நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 40 என்பவரை கைது செய்து பணத்தை மீட்டனர். மணிகண்டனை அன்னுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
17-Jul-2025