மேலும் செய்திகள்
கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
26-Feb-2025
பொள்ளாச்சி; பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார், கோவை செல்வபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோவை, செல்வபுரம் - ராமமூர்த்தி ரோட்டில் மறைவாக உள்ள இடத்தில், ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதை கண்டுபிடித்தனர்.பாலக்காடு, மலம்புழா மந்தக்காடுசாஸ்தா காலனியை சேர்ந்த சதாம் என்பவர், வாகனத்தில், 1,100 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்திச் சென்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ய பதுக்கியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
26-Feb-2025