போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் பயன்படுத்திய நபர் கைது
கோவை: ஆவாரம்பாளையம் கே.ஆர்.புரத்தில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் மேலாளர் அஜய்குமார், 33. கோவை காந்திபுரம் பகுதியில் இவரது நிறுவனத்தின் பெயரில், போலி ரப்பர் ஸ்டாம்ப்கள் பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. காந்திபுரம் இரண்டாவது வீதியில் உள்ள நிறுவனத்தில் பணிபுரியும், பொள்ளாச்சி, அப்பலான்கரையை சேர்ந்த சபரி பிரகாஷ், 38 என்பவர் போலி ரப்பர் ஸ்டாம்ப்களை பயன்படுத்தியது தெரிந்தது. அஜய்குமார் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார். பதிப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விசாரித்தனர். சபரி பிரகாஷ் மீதான புகார் உண்மை எனத் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், பிணையில் விடுவித்தனர்.