மேலும் செய்திகள்
ரூ.20 லட்சம் காப்பீடு வழங்கல்
11-Jul-2025
கோவை; கோவை ராமநாதபுரம், 80 அடி ரோட்டை சேர்ந்தவர் தினேஷ், 23; ஆட்டோ டிரைவர். இவரது நண்பர் சந்துரு, 20. நேற்று சந்துரு, தினேஷ் வீட்டுக்கு சென்று பாரதி நகர் செல்ல, ஆட்டோவில் அழைத்துச் சென்றார். தினேஷ் பின்னால் அமர்ந்து கொண்டார். சிறிது துாரம் சென்றதும் சந்துருவின் நண்பர்கள் லியோ, ஆகாஷ், 20 மற்றும் தரணி, 20 ஆகியோர் ஆட்டோவில் ஏறினர். பாரதி நகர் சென்றதும், அங்குள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு அழைத்து செல்லுமாறு தெரிவித்தனர். அதற்கு தினேஷ் மறுத்தார். இதனால் மூவரும் தினேசின் மொபைல்போனை எடுத்து வைத்துக்கொண்டனர். தினேஷ் வீட்டுக்கு புறப்படும் போது, போன் மாயமானதை அறிந்து, மூவரிடமும் போனை கேட்டார். அவர்கள் தர மறுத்து தினேசை தாக்கினர். தினேஷ் அளித்த புகாரின் பேரில், ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிந்து, சந்துரு, லியோ ஆகாஷ், ஆகியோரை சிறையில் அடைத்தனர்.
11-Jul-2025